கொரோனா உருவான ஆரம்பம் குறித்து WHOன் விசாரணைக்கு சீன அரசு அனுமதி மறுத்துள்ளது.
உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவியது சீனாவில்தான். சீனாவிலுள்ள வுகான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் உருவாகியது. ஆனால் இந்த பற்றிய தகவல்களை வெளிப்படையாக இதுவரை சீனா எந்த தகவலும் வழங்கவில்லை. சீனா வெளிப்படையாக இருந்திருந்தால் உலகநாடுகள் இந்த பேரிடரை சந்தித்திருக்குமா? இதை தவிர்த்திருக்கலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன. மேலும் உலக சுகாதார நிறுவனமும் சீனாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து வெளிப்படையாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் குழுக்களை வைத்து சீனாவில் சென்று விசாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது சீன அரசு இதற்கு அனுமதி அளிக்க மறுத்து இருக்கிறது. எனவே இது மிகவும் ஏமாற்றம் தருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச விசாரணைக்கு சீன அரசு முழுமையாக ஒத்துழைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி குறியாகவே இருக்கின்றது.