Categories
அரசியல் மாநில செய்திகள்

4 மீனவர்களின் உயிரிழப்பு குறித்து…. மீன்வளத்துறை அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு – வெளியான தகவல்…!!

மீனவர்களின் இறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி மத்திய மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அளித்த புகாரில் 4 பேரையும் தேடும் பணி முடுக்கப்பட்டது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் கடலில் நால்வரும் இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்ததுள்ளது தெரியவந்தது. இதையடுத்து இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமியை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கொன்றதாக  புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் முதல்வரை சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |