Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா பேசியது பற்றி….? செருப்பால அடிப்பேன்…. அதிரடி காட்டிய மயில்சாமி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமியிடம் திமுகவின் ஆ.ராசா ஹிந்துக்கள் பற்றி பேசிய கேள்விக்கு கருத்து கேட்ட போது,  பதிலளிக்க மறுத்த மயில்சாமி, நான் அரசியலுக்குள்  போகவே மாட்டேன் என தெரிவித்தார். நான் தேர்தலில் எதுக்கு நின்னனு கேளு ? எதிர்ப்பு தெரிவிக்க தேர்தலில் நின்றேன். தப்பான கூட்டணி என எதிர்ப்பு தெரிவிக்க தான் தேர்தலில் நின்னேன். ஜெயிக்கிறதுக்கோ,  எம்எல்ஏ ஆகுறதுக்கோ தேர்தலில்  நிக்கல.

எல்லாமே ஓட்டுக்காக பேசுறது தான். ஓட்டுக்காக பேசாமல், மக்களுக்காக பேசுங்க நல்ல தலைவனாக வருவீங்க. நான் தான் சொல்றேன்ல.. இந்து, கிறிஸ்டின்,  இஸ்லாமிய அப்படின்னு பிரிச்சு பேச மாட்டேன். மூணு மதம் சேர்ந்தா தான் எனது உடம்பு.

நீ கிறிஸ்டின் என பார்த்தால் என் கண்ணு, முஸ்லிம் என்று  பார்த்தீங்கன்னா இன்னொரு கண்ணு, நான் பேசுற மொழி என் வாய்,  எது எல்லாம் சேர்ந்து தான் இந்து,  இப்படித்தான் இருப்பேனே தவிர,  எனக்கு இது தேவை இல்லை என்று சொல்ல மாட்டேன். தேவை இல்லாதவனை ( ஜாதி, மதம் என பார்த்து, மக்களை பிரிப்பவன்  ) செருப்பால அடிப்பேன்  என தெரிவித்தார்.

Categories

Tech |