உணவகத்தில் சாப்பிட்ட பிறகு 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது
ஜோர்தான் தலைநகரான அம்மானுக்கு வெளிப்புறம் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டபிறகு 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. அந்த உணவகம் மாமிச உணவு ஒன்றை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்ததாக தெரியவந்துள்ளது.
அதிக அளவு வெயில் இருக்கும் இத்தகைய காலத்தில் முறையாக மாமிச உணவுகளை பராமரிக்காததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்த உணவகத்தில் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 826 பேரில் 5 வயது குழந்தையும் அடங்கும். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்தக் குழந்தை உயிரிழந்தது. திடீரென அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்களால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் பிரின்ஸ் ஹுசைன் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்.