மருத்துவ படிப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு மோசடி கும்பல்கள் களமிறங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை ஆர்.டி.ஐ மூலம் சமூக ஆர்வலர் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். வெளிநாட்டுக்கு ஏஜென்டுகள் மூலம் சென்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி செய்ய FMGE என்ற தகுதி தேர்வை கண்டிப்பாக எதிர் கொள்ள வேண்டும்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்து மருத்துவம் படிக்கின்றனர். ஆனால் அவர்களில் பயிற்சி பெறுவதற்கான நுழைவு தேர்வில் வெறும் 20 சதவிகித மாணவர்களே மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த அதிர்ச்சியான தகவலை மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த ராஜ் ஆர்.டி.ஐ மூலம் வெளிச்சத்திக்கு கொண்டு வந்தார். இந்த மோசடி பற்றி மருத்துவர்கள், வெளிநாட்டில் பயிலும் மாணவர்களின் கருத்துகள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.