பாலி நாட்டின் காட்டுக்குள் பெஜி கிரிய நீர்வீழ்ச்சி அருகே தமிழரின் தொன்மை கால சிவலிங்கம், விநாயகர், நாகம் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது .
சிவவழிபாடு உலகமெங்கும் பிரசித்தி பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பாலி நாட்டில் இன்றும் மக்கள் அதனை வழிபாடு செய்துவருகின்றனர். தனித்துவம் மிக்கதாக மலைகளையும் கற்களையும் உயிரோட்டமாக செலுத்தி சிற்பங்களையும், அமைதியான அழகான சூழலில் நீர்வீழ்ச்சிக்கு அருகே இறைவனை வழிபடும் பொருட்டு உருவாக்கியிருப்பது தான் மிகவும் வியக்கத்தக்கது. இதனை பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாக எழில் பொங்க மிகவும் அழகாக உள்ளது. இங்கு பல ஆண்டுகாலமாக வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.