Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் இபிஎஸ் எடுத்த திடீர் அதிரடி முடிவு?….. அதிர்ச்சியில் பாஜக டெல்லி மேலிடம்….!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது வருகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று கூட்டத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாஜக அதிமுக கட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை எப்படி எதிர்ப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வெளிவந்த தகவல் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜகவின் நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடன்பாடு இல்லாததால் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம். இதற்காகத்தான் அண்மையில் கூட சிவி சண்முகத்தை எடப்பாடி பழனிச்சாமி தூண்டிவிட்டு பேச சொன்னதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக பாஜகவும் தயார் என்பது போல் இருந்தாலும், இது  டெல்லி மேலிடத்திற்கு சற்று தலைவலியாகவே அமைந்துள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Categories

Tech |