அபுதாபியில் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அபுதாபியில் முஸ்லிம் இல்லாதவர்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் முதல் தடவையாக கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் நீதித்துறை செயலாளரான யூசுப் சயத் அல் அப்ரி தெரிவித்திருப்பதாவது, கடந்த மாதம் அபுதாபியில் முஸ்லிம் இல்லாதவர்களுக்கு என்று சிறப்பாக குடும்ப நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
அதில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் எளிதில் திருமணம் செய்து கொள்ளவும், விவாகரத்து போன்ற உதவிகளைப் பெறவும் வழி வகுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இணையதளம் வழியாகவும் சேவைகளை பெறலாம். மேலும் இந்த நீதிமன்றத்தில் குடியிருப்பு விசா வாங்கியவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என்று அனைத்து மக்களும் தங்களின் தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகளுக்காக தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அரபு நாடுகளிலேயே முதல் தடவையாக அபுதாபி நீதித்துறை தான் முதல் சிவில் திருமண ஒப்பந்தத்தை கனடாவை சேர்ந்த தம்பதிக்கு அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.