திருவாரூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 21 பேரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 463 நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தலைமைச்செயலக விழிப்பு பணிக்குழு தலைமையில் இரண்டு நாட்களாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர். அதில்,
பல்வேறு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டையின் எடை குறைபாடு, பணம் கையாடல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், 14 பட்டியல் எழுத்தாளர்கள், ஏழு உதவியாளர்கள் உட்பட 21 பேரை பணியிடை நீக்கம் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதி அரசு அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.