அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியை பறிப்பதற்கு கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய சபையின் சட்டக்குழு அங்கீகரித்துள்ளது.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளான ட்ரம்ப் அவர்களின் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் ஹவுஸ் புரோபர்டி குழுவினர் தீர்மானத்திற்கு ஆதரவாக 23 பேரும் எதிராக 17 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து 435 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு செல்கிறது.
ஜனநாயக கட்சியில் 233 உறுப்பினர்கள் உள்ள நிலையில் இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸுக்கு முன்பாக முழு நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் செனட் சபை குற்றவாளி என்று நிரூபித்தால் தான் அதிபர் பதவியில் நீக்கம் செய்ய முடியும். இந்நிலையில்குடியரசுக் கட்சியினர் 53 உறுப்பினர்களின் ஆதரவு டிரம்ப்க்கு ஒருவேளை சாதகமாக அமையலாம்.