குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை தனக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளுடன் இணைந்து சமையல் செய்ய போராடும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இறுதி சுற்றை நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் , ஷகிலா ,பாபா பாஸ்கர் மாஸ்டர், கனி, பவித்ரா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் மணிமேகலை ஒரு சிறிய விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டிருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ‘ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை , ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை . அடுத்த இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்வேன்’ என்று பதிவிட்டுள்ளார்.