10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேவையான மேசை, நாற்காலி விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே 11 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்த்து தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது.ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது.
அதன்படி ஜூன் 15ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இதனையடுத்து தேர்வு நடத்துவதற்கான பணிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து மாணவர்கள் தேர்வுக்கு வருவதற்கு இ-பாஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து அந்தந்த பகுதிகளிலேயே மாணவர்கள் தேர்வு எழுத தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகாக கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. எனவே அதற்கு தேவையான மேசை, நாற்காலி விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டது. மே 29ம் தேதிக்குள் தேவையான பொருட்கள் குறித்த முழு விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் 5 இணை இயக்குனர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியை மேற்பார்வையிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.