Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேகமெடுத்த ”நிவர்” புயல்…. 7லில் இருந்து 11ஆக அதிகரிப்பு …. நொடிக்கு நொடி உஷார் …!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயலானது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகருகிறது.

முன்னதாக மணிக்கு ஏழு கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த வேகத்தில் நகர்ந்து வரும் பட்சத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான நேரத்தில் கரையை கடப்பதற்காக வாய்ப்பு இருக்கிறது.

முன்னதாக சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 350 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் தற்போது சற்றே நகர்ந்து வந்து 300 கிலோ மீட்டர் தொலைவில், கடலூருக்கு 240 கிலோ மீட்டர்,  புதுச்சேரிக்கு 250 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம்கொண்டிருக்கிறது.

தற்போது அந்த புயல் வேகம் அதிகரித்திருப்பது  தீவிரத்தன்மை எடுத்துள்ளது. இப்போதைக்கு தீவிர புயலாக தான் இருக்கிறது. இன்னும் ஆறு மணி நேரத்திற்குள்ளாக இந்த புயல் அதி தீவிர புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதி தீவிர புயலாக மாறும் பட்சத்தில் காற்றின் வேகம் என்பது அதிகரிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. இன்று மாலை நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |