அமெரிக்க பிரதமரின் பரிந்துரையின்படி பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரை நியூ ஜெர்சி மாவட்ட கோர்ட்டின் நீதிபதியாக நியமிப்பதற்கு நாடாளுமன்றம் செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற, பின்னர் பலவிதமான நிர்வாக பொறுப்புகளுக்கு வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்களை பரிந்துரை செய்துள்ளார். இவருடைய இந்தப் பரிந்துரைக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வழங்கினால் மட்டுமே வெளிநாட்டு வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு நிர்வாக பொறுப்பு வழங்கப்படும்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியூஜெர்சி மாவட்ட கோர்ட்டின் நீதிபதி பதவிக்கு பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாகித் குரேஷி என்பவரை கடந்த மார்ச் மாதம் பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சாகித் குரேஷிக்கு நீதிபதி பதவி வழங்குவது குறித்த வாக்கெடுப்பு நடந்துள்ளது.
இந்த வாக்கெடுப்பில் அவருடைய பதவி நியமனத்திற்கு 81 வாக்குகள் கிடைத்ததால், நாடாளுமன்ற செனட் சபை சாகித் குரேஷிக்கு நியூ ஜெர்சி மாவட்டத்தின் நீதிபதி பதவியை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.