மதுரையை சேர்ந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மிளகரணையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ். இவர் சிக்கந்தர் சாவடியில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அன்பரசு என்ற 15 வயது சிறுவனும் உடன் இருந்துள்ளான்.
சிக்கந்தர் சாவடி அருகில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி நாகராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டு நாகராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் இருந்த அன்பரசு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அலங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.