Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

லாரி-பைக் மோதல்…. மின்வாரிய ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இருசக்கர வாகனம்-லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் மின்வாரிய ஊழியர் ராஜேஷ் வசித்து வந்துள்ளார். இவர் பணியின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி இவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |