லாரி ஒன்று ஆட்டோ மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ மூலம் பால் வினியோகம் செய்து வந்தார். அவ்வாறு அவர் நேற்று காலை எலியார்பத்தி அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு பால் விநியோகம் செய்துவிட்டு ஆட்டோவை எடுக்கும் நேரத்தில் பின்னாலிருந்து வந்த ஒரு லாரி ஆட்டோவின் மீது மோதியுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி ஓட்டுநரான சிவப்பிரகாசர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.