விபத்தில் சிக்கிய அரசு பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கிராமத்தில் வீரய்யா என்பவர் வசித்து வந்தார். இவர் மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலை முடிந்த பின்பு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்துள்ளார்.
பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வீரய்யா மனைவி அளித்த புகாரின் பேரில் கீழவளவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.