ராணிப்பேட்டையில் 2 மோட்டார் சைக்கிள்கள் எதிரெதிரே மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் கூலித் தொழிலாளியான மோகன்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் ஆற்க்காட்டிற்கு அருகே தென்கழனி என்ற பகுதியில் சென்றுள்ளார். அப்போது இவருடைய மோட்டார் சைக்கிளுக்கு எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சற்றும் எதிர்பாராதவிதமாக மோகன் குமாரினுடைய பைக்கின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மோகன் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.