சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே லாரி மோதி சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே மூங்கில் ஊரணி பகுதியில் அப்துல் ரகிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலாவுதீன் ( 8 ) என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் மானாமதுரை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியதில் அலாவுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் பாலகுருவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.