சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழகாவனிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ஆண்டி என்பவரது மகன் கருப்பையா ( 25 ) சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கருப்பையா இரணியூரிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் கருப்பையாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அதன்பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று கருப்பையா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.