நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வேன் ஒன்று கேரள மாநிலத்தை நோக்கி தக்காளி பாரம் ஏற்றிக் கொண்டு சென்றது. பிரவீன் என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். அவருடன் தக்காளி வியாபாரியான அணில்குமார் வந்துள்ளார். இருவரும் தொப்பூர் கணவாய் வளைவில் நேற்று முன்தினம் வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி நின்றுள்ளனர். அந்த சமயத்தில் பின்னாலிருந்து மீன் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த அணில்குமார் படுகாயமடைந்தார். பிரவீன் காயமின்றி தப்பித்தார். பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் அணில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.