Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேகத்தடையில கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் பைக்கிலிருந்து பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் துரைச்சி என்ற பெண்மணி வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அவருடைய உறவினரது மோட்டார் சைக்கிளில் நெல்லையிலிருக்கும் தன்னுடைய இளைய மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தாழையூத்து பகுதியிலிருக்கும் வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது சற்றும் எதிர்பாராதவிதமாக பின்னால் அமர்ந்திருந்த அவர் தவறி விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |