Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யார் அந்த முதியவர்….? அதிகாலை 3 மணிக்கு நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் கட்டகுலம் பிரிவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இறந்த முதியவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது இன்னும் தெரியவரவில்லை. அவர் வெள்ளை நிற வேட்டியும் பச்சை நிற சட்டையும் ஊதா நிற கால் சட்டையும் அணிந்து இருந்தார் என போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |