Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த விபரீதம்… விவசாயிக்கு நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலிகுளம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயியான முத்தையா தனது மகன் வினோத்குமாருடன் மோட்டார் சைக்கிளில் தேவகோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் மகன் வினோத்குமார் மாவிடுதிகொட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுவிட்டார். இதையடுத்து முத்தையா சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குமானி கிராமத்தில் வசித்து வரும் ரத்தினவேல் என்பவர் மோட்டார் சைக்கிளில் தேவகோட்டைக்கு வந்து கொண்டிருந்தார்.

அவர் எதிர்பாராதவிதமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முத்தையா மீது மோட்டார் சைக்கிளோடு மோதியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த முத்தையா சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தேவகோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |