விபத்தில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேல பெருமாள்பட்டி கிராமத்தில் மாயி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஷேவாக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஹரிஹரன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11 வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் ஷேவாக்கும் ஹரிஹரனும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் செக்கானூரணி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் கண்ணனூர் அருகில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.