வேகமாக சென்ற கார் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சதாசிவம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதாசிவம் அப்பகுதியில் இருக்கும் பொது குளியல் தொட்டியில் குளித்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திருமங்கலம் நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக சதாசிவத்தின் மீது மோதி விட்டது.
இதில் படுகாயமடைந்த சதாசிவத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சதாசிவம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த திருமங்கலம் தாலுகா காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.