மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஞ்சாலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி மெயின்ரோட்டில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது.
இதனை அடுத்து படுகாயமடைந்த கணவன் மனைவி இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய ஓட்டுநரின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.