Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பணியை முடித்த நகை மதிப்பீட்டாளர்…. மகனுடன் வீட்டிற்கு பயணம்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மூர்த்திபட்டி கிராமத்தில் இலட்சுமணன்-நதியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். நதியா நங்கவள்ளி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நதியா நேற்று வழக்கம்போல் வங்கி பணிக்கு வந்துள்ளார். பின்னர் மதியம் பணி முடிந்தபின் தனது மகனான சபரிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இவர்கள் நங்கவள்ளி-மேச்சேரி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சபரிநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சபரிநாதன் மற்றும் நதியா நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளனர். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு நதியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் சபரிநாதனுக்கு அதே மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நதியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |