பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து மற்றும் லாரி எதிரெதிரே மோதிக்கொண்டதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கானில் என்னும் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது இந்த பயணிகள் பேருந்திற்கு எதிராக அதே நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது.
இந்நிலையில் திடீரென பயணிகள் பேருந்தும் எதிரே வந்த லாரியும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் 30 பேர் பலியாகியுள்ளார்கள்.
மேலும் இந்த கோர விபத்தில் 40 க்கும் மேலானோர் படுகாயமடைந்துள்ளார்கள். இவ்வாறு படுகாயமடைந்த பயணிகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.