ரஷ்யாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குழாயில் திடீரென ஏற்பட்ட வெடிப்பின் காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிலுள்ள விளாடிகாவ்காசில் என்னும் பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையிலிருக்கும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு ஆக்சிஜன் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குழாயின் மூலம் செல்கிறது. இந்நிலையில் இந்த குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆக்சிஜன் வினியோகம் தடைபட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த கொரோனா நோயாளிகளில் சுமார் 11 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை பொருத்தி ஆக்சிஜன் வினியோகம் செய்ததால் அவர்கள் உயிர் பிழைத்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யாவின் மத்திய சுகாதார துறை விசாரணை நடத்துவதற்கு ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.