இங்கிலாந்திலுள்ள வளாகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எழுந்த கரும்பு கையினால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் juno drive என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் பயங்கர வெடி சத்தத்துடன் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடிவிபத்தால் எழுந்த கரும்புகையை சுவாசித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் தலை சுற்றல் போன்ற மருத்துவ ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் அதிகாரிகள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருக்கும் பொதுமக்களை வெளியே வராதீர்கள் என்றும், வீடுகளின் ஜன்னல் கதவுகளை மூடி வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.