மத்திய சூடானில் மிகவும் வேகமாக சென்றதால் சரக்கு வண்டியும், பேருந்தும் ஒன்றுக்கொன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சூடானில் கெஜிரா என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் மிகவும் வேகமாக சரக்கு வண்டியும், பேருந்தும் சென்றுள்ளது.
இந்நிலையில் திடீரென மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு வாகனமும் மிகவும் வேகமாக சென்றதால் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்வாறு ஏற்பட்ட அதி பயங்கர விபத்தில் 8 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி 13 பேர் இந்த கோர விபத்தினால் படுகாயமடைந்துள்ளார்கள்.