Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய கார்…. தூக்கி வீசப்பட்ட விவசாயி…. மகளின் அதிரடி நடவடிக்கை….!!

கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் மூர்த்திபாளையம் பகுதியில் சுப்புராயன் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் பரமத்திவேலூருக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் சேலம் கரூர் நெடுஞ்சாலையில் காவிரி ஆற்று பாலத்தின் மேல் கேரளா நோக்கி சென்ற கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்புராயன் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சுப்புராயனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சுப்புராயன் மகள்  கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரான ப்ரீத்தி ஜோசப் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |