கிரீஸில் நடுக்கடலில் கவிழ்ந்த படகில் சென்ற அகதிகளில் 11 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள்.
கிரீஸில் அதிகளவு அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் இந்த படகு திடீரென நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி அதிலிருந்த அகதிகளை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இருப்பினும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குழந்தைகள் உட்பட 90 அகதிகளை கடலோர அதிகாரிகள் உயிருடன் மீட்டுள்ளார்கள். மேலும் மீட்புக்குழுவினர்கள் கவிழ்ந்த படகிற்கடியில் எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று தேடி வருகிறார்கள்.