மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்த விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓ. பள்ளத்துபட்டி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான செல்வராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் மோசகுடி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே தெரு நாய் ஒன்று சென்றுள்ளது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக செல்வராஜ் பிரேக் பிடித்துள்ளார்.
இதனால் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து செல்வராஜ் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் செல்வராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.