Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நண்பரை விட்டுவிட்டு வந்த போது நேர்ந்த சோகம்…. நேருக்கு நேர் மோதிய லாரி….. உயிரிழந்த சூப்பர்வைசர்

லாரி மோதிய விபத்தில் சூப்பர்வைசர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூர் திருநீலகண்டர் நீதியை சேர்ந்த ராஜா இவர் தனியார் நூல் மில் ஒன்றில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்துள்ளார். ராஜா நேற்று இரவு ஆப்பக்கூடல் அடுத்த வாடி புதூரில் தனது நண்பர் ஒருவரை இறக்கி விட்டுவிட்டு அந்தியூர் நோக்கி திரும்பி வந்துள்ளார். அப்போது ஆப்பக்கூடல் இலிருந்து அந்தியூர் நோக்கிவந்த ஈச்சர் லாரியை பாலரமேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் சென்னிமலை கவுண்டன் புதூர் அருகே வந்தபொழுது ராஜாவும் லாரியில் வந்த பால ரமேஷும் எதிரெதிரே மோதிக்கொண்டனர் இதனால் ராஜா தலையில் பலத்த அடிபட்டு விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை அந்தியூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைதொடர்ந்து ஈச்சர் லாரி ஓட்டி வந்த ரமேஷ் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |