மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் அந்தோணி பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இதனால் அந்தோணி பீட்டர் சத்தியமங்கலம் கொங்கு நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் மற்றும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனது மகளின் 3 பேரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தோணி பீட்டர் தனது 2 மகள்களையும் பள்ளிக்கூடத்தில் கொண்டு சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அய்யப்பன் நகர் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அந்தோணி பீட்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்தோணி பீட்டரின் உடலை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான ஆலத்துக்கோம்பை பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.