கட்டிடத்திலிருந்து பெயிண்டர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு பகுதியை சார்ந்த ரங்கநாதன் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்றுள்ளார். பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது நிலைதடுமாறிய ரங்கநாதன் அங்கிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் ரங்கநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.