Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த மெக்கானிக்…. தஞ்சாவூரில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கராஜபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாச்சியார் கோவிலில் இருந்து நன்னிலத்தில் உள்ள மெக்கானிக் கடைக்கு கண்ணன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிலாவடி அருகில் சென்று கொண்டிருந்தபோது நாகூர் பகுதியில் வசிக்கும் தாரிக் நூர் முகமது என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனையடுத்து தாரிக் நூர் முகமது காருடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கண்ணனை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கண்ணனின் மனைவி மலர்க்கொடி குடவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |