அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆறாக்குளம் பிரிவு அருகில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மொபட்டில் சென்ற ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையோரம் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கொத்துமுட்டி பாளையம் பகுதியில் வசிக்கும் முத்துசாமி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர் ஆறாக்குளம் பிரிவில் கட்டிட வேலைக்காக சென்று விட்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து முத்துசாமியின் மகன் கோகுல் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.