ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ டிரைவரான ஹேம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் ஹேம்குமார் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது காயல் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவில் வசிக்கும் இசக்கிமுத்து என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஹேம்குமார் ஓட்டி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் ஆட்டோ தலைகீழாக சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ஹேம்குமார் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையிலும், இசக்கிமுத்து திருச்செந்தூர் அரசு மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.