Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்…. ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மொபட்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூரியர் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளப்பாண்டி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பிள்ளையன்மனை பகுதியில் வசிக்கும் ஏஞ்சல் என்பவர் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏஞ்சல் ஓட்டி வந்த மொபட்டும் வெள்ளப்பாண்டி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வெள்ளப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவி ரேவதி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் பலத்த காயமடைந்த ஏஞ்சலை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |