Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரவேல்புரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது உறவினரான கண்ணன் மற்றும் நண்பர் ஆசிக் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தியாநகர் மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் சாலையில் கிடந்த போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பலத்த காயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆஷிக் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |