டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலகொண்டூர் கிராமத்தைச் சார்ந்தவர் முத்து. இவருடைய மகன் ஜெயபால் என்பவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். புதூர் கிராமத்தில் வயலில் உழுது விட்டு வீட்டிற்கு செல்வதற்காக டிராக்டரை வயலில் இருந்து மேலே ஏற்றி உள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
இதில் டிராக்டர் அடியில் சிக்கிய ஜெயபால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.