Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இட்லி வாங்கிட்டு வாறேன்…. நண்பருடன் சென்ற மகன்… மதுரையில் நடந்த சோகம்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் பரிமளா தேவி. இவருக்கு 16 வயதில் ராஜசேகர் என்ற ஒரு மகன் இருந்தார். ராஜசேகர் தனது நண்பனான பூமி ராஜாவுடன் இட்லி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜசேகர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதில் ராஜசேகரும் பூமி ராஜாவையும் பலத்த காயமடைந்தனர். உடனே அருகிலிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பூமி ராஜா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |