மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அவிநாசி பாளையம் பகுதியில் இருந்து கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதன்பின் இவர் அவிநாசிபாளையம் ஊருக்குள் செல்வதற்காக வலதுபுறம் திரும்பும்போது, பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனம் பழனிச்சாமி மீது மோதி விட்டது.
இந்நிலையில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட பழனிசாமி, அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அவிநாசிபாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.