மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் சேகர் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பெரும்பாக்கம் காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரின் மீது மோதி விட்டது.
இதில் படுகாயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இந்த விபத்துக்கு காரணமான தண்ணீர் லாரி டிரைவரான பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வரும் சுரேந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.