Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லோடு ஆட்டோ… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து… நாமக்கல்லில் பரபரப்பு…!!

லோடு ஆட்டோ மினி லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள முருங்கபாளையம் பகுதியில் முத்து பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு மாடுகளை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதன்சந்தைக்கு அதனை விற்பனை செய்வதற்காக முத்துப்பாண்டியன் சென்றுள்ளார். இவருடன் கரூர் மாவட்டத்தில் வசிக்கும் வியாபாரிகளான ராமலிங்கம் என்பவரும், அவருடைய மகன் சக்திவேல் என்பவரும் உடன் சென்று இருக்கின்றனர். இவர்கள் மாடுகளை விற்று விட்டு சேலம்-கரூர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி உள்ளது.

அப்போது சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதி விட்டது. இந்த விபத்தில் முத்து பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காங்கேயம் பகுதியில் வசித்து வரும் மினி லாரி டிரைவரான பூபதி, மாட்டு வியாபாரி ராமலிங்கம், சக்திவேல் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துப்பாண்டியன் உடலை கைப்பற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |