வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரியமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலாஜி. இவர் சாவுளூர் மேம்பாலம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் பாலாஜி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றள்ளது. இதனால் பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.